tamilnadu

img

பாகிஸ்தானிலிருந்து இந்திய பகுதிகளில் நுழைந்த விமானம்

புதுதில்லி, மே 11-இந்திய எல்லைக்குள் அனுமதியில் லாத வான்வெளியில் பறந்த ஆண்டனோவ்ஏ.என்-12 வகை சரக்கு விமானம் ஒன்றைஇந்திய விமானப்படை விமான த்தால் வெள்ளிக்கிழமையன்று இடைமறித்து, ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தது மேற்கண்ட தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம்தெரிவிக்கிறது.வெள்ளியன்று மாலை 4.55 மணிக்கு தரையிறங்கிய அந்த விமானத்தின் குழுவினரிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மூத்த அரசு அதிகாரிகள் கூறினர். பயணிகள் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, கட்ச் பாலைவனத்தின் வான்வெளியில் இந்த விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது.“கராச்சியில் இருந்து டெல்லி செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த அந்த ஆண்டனோவ் ஏ.என்-12 விமானம், தாம் பயணிக்க வேண்டிய பாதையில் இருந்து விலகி,குஜராத்தின் வடக்குப் பகுதியில், பறக்க அனுமதி இல்லாத வான்வெளிக்குள் நுழைந்தது. மிகவும் எச்சரிக்கையாக இருந்த இந்தியவிமானப்படை விமானத்தால் தடுத்து, இடைமறிக்கப்பட்டு அது தரையிறங்க வைக்கப்பட்டது,” என இந்திய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் குரூப் கேப்டன்அனுபம் பானர்ஜீ கூறினார்.